இந்த இடத்தில்தான் அடில் ரஷீத் வீசிய ஒரு ஓவர் அதிக கவனத்தை ஈர்க்கிறது. அடில் ரஷீத் வீசிய அந்த 12 வது ஓவரில் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தியதோடு ஒரு ரன்னைக் கூட கொடுத்திருக்கமாட்டார். விக்கெட் மெய்டனாக்கியிருந்தார்.
10 ஓவர்கள் முடிந்தவுடன் டிரிங்ஸ் ப்ரேக் விடப்படுகிறது. இந்த ப்ரேக்கிலேயே பாகிஸ்தான் போட்டியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டது.
ஷான் மசூத் சிக்சரும் பவுண்டரியும் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில்தான் அடுத்த 12 வது ஓவரையே அடில் ரஷீத் வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்திலேயே பாபர் அசாம் அடில் ரஷீத்திடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பாபர் அசாம் இந்த ஆண்டு முழுவதுமே ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறத்தான் செய்திருக்கிறார்.
அடில் ரஷீத் வீசிய இந்த ஓவர் விக்கெட் மெய்டன். இந்த ஓவருக்கு முந்தைய மூன்று ஓவர்களில் அதாவது 9, 10, 11 ஆகிய ஓவர்களில் பாகிஸ்தான் அணி 34 ரன்களை சேர்த்திருந்தது.
அதேநேரத்தில், அடில் ரஷீத் இந்த ஓவரை வீசிய பிறகான மூன்று ஓவர்களில் அதாவது 13, 14, 15 இந்த 3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
கடைசி 5 ஓவர்களில் கூட பாகிஸ்தான் 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
பாகிஸ்தானின் வீழ்ச்சியை தொடங்கி வைத்த அந்த 12 வது ஓவரில் மட்டும் பாபர் அசாம் ஜாக்கிரைதையாக இருந்து அடில் ரஷீத்தை கடந்திருந்தார் எனில் பாகிஸ்தான் பெரும் வீழ்ச்சியை தவிர்த்திருக்கக்கூடும்.
சாம் கரனின் 4 ஓவர்களையுமே கூட குறிப்பிட்டாக வேண்டும். 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அடுத்த ஓவரிலேயே மொயீன் அலியும் அட்டாக்கைத் தொடங்க 19 வது ஓவரிலேயே இங்கிலாந்து போட்டியை முடித்தது. ஒருவேளை ஷாகீன் ஷாவுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால்? ஷாகீன் ஷா அந்த 16 வது ஓவரை முழுமையாக வீசியிருந்தால்? என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.
ஆனால், கடைசிப் பந்து வரை போட்டி சென்றிருக்கும் என்பது மட்டும் உறுதி!