இதன் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரிகத் தொடர்பு மீண்டும் புதுப்பிக்கக்கூடிய வகையில் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒரு மாத காலம் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
எனவே, இதில் பொதுமக்களும் இணைந்து காசி தமிழ்ச் சங்கமப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக மாற்ற வேண்டும். அது நமது கடமை. வரும் 19-ம் தேதிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இது தமிழக மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், பிரதமர் மோடி தமிழகத்தின் மீது வைத்துள்ள உணர்வைக் காட்டுகிறது. தமிழ்நாட்டுக்காக அவரின் இதயம் எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.