ஹனுமன் கோயில் வடிவ கேக்: `கமல்நாத் இந்துகளின் மனதைப் புண்படுத்திவிட்டார்” - குற்றம்சாட்டும் பாஜக
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது சொந்த ஊரான சிந்த்வாராவுக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றார்.
அங்கு கமல்நாத் ஆதரவாளர்கள் அவரின் 76-வது பிறந்தநாளைக் கொண்டாட முடிவுசெய்தனர். கமல்நாத்துக்கு நவம்பர் 18-ம் தேதிதான் பிறந்தநாள்.
ஆனால், சொந்த ஊருக்கு வந்ததால் அங்கேயே பிறந்தநாளைக் கொண்டாட முடிவுசெய்து கேக் வாங்கிவரப்பட்டது.
கமல்நாத் ஆதரவாளர்கள் வாங்கிவந்த கேக் ஹனுமான் கோயில் வடிவத்தில் இருந்தது. அதை கமல்நாத் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இது தொடர்பாக அவர்அளித்த பேட்டியில், கமல்நாத்தும், அவரின் போலி பக்தர்களும் இந்து மதத்துக்காக எதையும் செய்யவில்லை. கமல்நாத் இருக்கும் கட்சிதான் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தது.
கமல்நாத் தனது சொந்த ஊரிலுள்ள வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. ஆனால் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா மகன், தன் ஆதரவாளர்களுடன் பாஜக-வில் சேர்ந்தார்.