வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் செல்போனில் சண்டை; பெண் தற்கொலை - சந்தேகம் கிளப்பும் பெற்றோர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 25).
இவருக்கும், குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தம்பதி இருவரும் குண்டலகுத்தூர் கிராமத்தில் கூட்டுக் குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். கட்டடத் தொழிலாளியான வழிவிட்ட அய்யனார்,
தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில் பானுமதி தனது கணவர் அய்யனாருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மனமுடைந்த பானுமதி வீட்டிலுள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில், மருத்துவமனைக்கு வந்த பானுமதியின் பெற்றோர் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
மேலும் கூறாய்வு அறிக்கையின் முடிவின்படி தவறு செய்தவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பானுமதியின் உடலை வாங்கிச் சென்றனர்.