திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியும்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்
இதற்காக ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு முதல்வர் ஸ்டாலின் கார் மூலமாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
ஆனால், காலையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
அதையும் பொருட்படுத்தாமல் மாவட்ட எல்லையான வேடசந்தூரில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க பலத்த மழையிலும் கூட குடை பிடித்
மழையிலும் கூட குடை பிடித்தவாரே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,
வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக திரண்டு முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் பயணியர் விடுதியில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.